2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

காட்டு யானைத் தாக்குதலால் ஏற்படும் இழப்புகளுக்கான இழப்பீடு அதிகரிப்பு

Thipaan   / 2016 செப்டெம்பர் 14 , பி.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

காட்டு யானைகளால் பறிக்கப்படும் மனித உயிர்கள் மற்றும் சொத்துகள் என்பவற்றுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்கும் யோசனைக்கு, அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளது என ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவையின் இணைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

இந்த புதிய யோசiiயின் படி, வருடாந்தம் 25 - 30 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் அந்தத் தொகையை அதிகரித்து, யானைத் தாக்குதலுக்கு இழக்காகி உயிரிழப்பவர்களுக்கு 2 இலட்சம் ரூபாயும், நிரந்தரமாக அங்கவீனமடைந்தால் 2 இலட்சம் ரூபாயும் (தற்போதுள்ள வயது எல்லையை அகற்றிவிட்டு),  காயமடைந்தால் 75 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கப்படும். அத்துடன்,  வீடு மற்றும் சொத்துச் சேதங்களுக்கு, 1 இலட்சம் ரூபாய் வீதம் வழங்கப்படுவதுடன் இழப்பீட்டை பெற்றுக்கொள்வதற்கான நடைமுறைகளைக் குறைத்து, பிரதேச செயலாளர் தலைமையில் உருவாக்கப்படும் குழு ஊடாக இழப்பீட்டு தொகையை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .