2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

510 கிராம் கஞ்சா வழக்கு: சிறுமிக்கான தண்டனை இரத்து

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

510 கிராம் கஞ்சாவை தம்வசம்வைத்திருந்தாக கூறப்படும் 17 வயது சிறுமிக்கு விதிக்கப்பட்ட 250 நாட்கள் கட்டாய சிறைதண்டனையை அம்பாறை மாகாண மேல்நீதிமன்ற நீதிபதி சுமுது பிரேமச்சந்திர இரத்துசெய்துள்ளார்.

கட்டாய சிறைத்தண்டனை தீர்ப்பு, அம்பாறை மேலதிக நீதவான் கெமிந்த தெவின் பெரேராவினால் விதிக்கப்பட்டிருந்தது.
அந்த சிறுமிக்கு விதிக்கப்பட்ட 6ஆயிரம் ரூபாய் தண்டத்தை அரச கட்டமாக்கிவிடுமாறும் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கட்டாய  சிறைத்தண்டனைக்கு பதிலாக நன்னடத்தை பாதுகாப்பில் வைத்து புனர்வாழ்வளிக்குமாறும் பணித்துள்ளார்.

ஐ.நா.வின் சிறுவர் கொள்கைக்கு ஏற்பட பிள்ளையின் ஆகக்கூடிய நலனை கருத்தில்கொண்டு அந்த தண்டனை குறைப்பதற்கு கட்டளையிட்டதாவும் மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .