2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘குற்றவியல் தவறொன்றின் பொறுப்பை ஏற்கும் வயதெல்லை உயரும்’

Princiya Dixci   / 2016 நவம்பர் 03 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

குற்றவியல் தவறொன்றின் பொறுப்பை ஏற்கும் ஆகக் குறைந்த வயதெல்லையை உயர்த்துவது போன்ற சில அடிப்படை அம்சங்கள் சிலவற்றில் மாற்றங்களை ஏற்படுத்த, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக, அமைச்சரவையின் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.  

“12 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவரொருவரால் குற்றமொன்று புரியப்பட்டால், அதற்குத் தண்டனை வழங்கப்படக்கூடாது என்றும் 12 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்கள், குற்றச்செயல்களைப் புரியக்கூடிய கடினமான மனநிலையைக் கொண்டிருந்தால், அது தொடர்பில் நீதவான் அவதானித்திருக்கும் பட்சத்தில் தண்டனை வழங்கும் வகையிலான உறுப்புரைகளை உள்ளடக்கியதாகத் தயாரிக்கப்பட்டுள்ள தண்டனைச் சட்டக் கோவைச் திருத்தச் சட்டமூலத்தை, அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் நாடாளுமன்ற அங்கிகாரத்துக்காக முன்வைப்பதற்கும், அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்தது” என, அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .