2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

‘சமபாலுறவைக் குற்றமாக்கும் பிரிவுகளை அகற்றி விடவும்’

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றவியல்கோவைச் சட்டம் மற்றும் தெருச்சுற்றல் நிலையியற் கட்டளைச் சட்டம் என்பவற்றை, அரச அதிகாரத்தில் உள்ளவர்கள் பயன்படுத்த முடியும். ஆகையால், சமபாலுறவை, குற்றவியல் குற்றமாக்கும் பிரிவுகளை அகற்றவேண்டுமென, தேசிய சமாதான பேரவை, அரசாங்கத்திடம் கோரியுள்ளது.   இந்த விவகாரம் தொடர்பில், அப்பேரவை நேற்று அனுப்பிவைத்திருந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாவருக்கும் சமத்துவம் மற்றும் பாகுபாடின்மை என்றவகையில் பார்த்தால், சமபாலுறவானது குற்றவியல் குற்றமற்றதாகும்.  

அவற்றுக்கு அமைவாக, சட்டத்திருத்தங்களை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. அதனையிட்டு, தேசிய சமாதானப் பேரவையானது ஏமாற்றமடைந்துள்ளது. அத்துடன், சிறுபான்மையினரின் உரிமையை பாதுகாத்தல், என்பதனை பார்க்குமிடமிடத்து, இதனை பின்னடைவாகவே பேரவை கருதுகின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. 

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அமைய, சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தில் பெண்-பெண் சமபாலுறவு, ஆண்-ஆண் சமபாலுறவு, ஆண்-பெண் பாலுறவில் ஈடுபடுவோரின் உரிமைகளை பாதுகாக்கவேண்டிய கடப்பாடு உள்ளது. இதற்கான ஒப்பந்தங்களில் இலங்கை கையொப்பம் இட்டும் உள்ளன. 

இலங்கையில், சமபாலுறவு தொடர்பிலான வழக்குகள் பதிவாகவில்லை. சமபாலுறவாளர்கள் மீது பாகுபாடு காட்டுதல், அவர்களை துன்புறுத்தல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை தொடர்பிலேயே மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.  

வித்தியாசமான பாலியல் விருப்புடன் மக்களை துன்புறுத்தல், பாலியல் ரீதியில் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாத்து அவர்களுக்கு எதிரான பாகுபாட்டை அகற்றவேண்டுமென, சகல மட்டங்களிலும் உள்ள சிவில் சமூகத்தினரை நாம் கேட்டுகொள்கின்றோம். 

இலங்கையின் இன மோதல்களுக்கு, பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணும் நோக்கில், சுதந்திரமாக, பக்கச்சார்பின்மையாக செயற்படும் நிறுவனமே தேசிய சமாதான பேரவையாகும். அந்தப் பேரவைக்கு, சகல சமூகத்தினதும் சுதந்திரம், மனித உரிமைகள் என்பன மதிக்கப்பட்டு, சமாதானமாக செழிப்பாக இலங்கையை கட்டியெழுப்பவேண்டுமென்ற தொலைநோக்கும் உள்ளது” என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X