Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 நவம்பர் 03 , மு.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.நிரோஷினி
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு மேலும் பலம் சேர்க்கும் விதமாக, கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டம், நாளை (இன்று) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மஹரகம மாநாகர சபைக்கு முன்னால் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது என மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார்.
மேல் மாகாண முதலமைச்சின் காரியாலயத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பலத்தை மேலும் அதிகரிக்கும் முகமாக கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டம், மஹரகம பிரதேசத்திலிருந்து முதலில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
கட்சியில் அங்கத்தவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கு அங்கத்துவ உரிம அட்டை இருக்கின்றபோதும் அது முறையாகப் பதிவுசெய்யப்படவில்லை. மேலும், பழைய அங்கத்தவர்கள் தொடர்பில் எவ்வித தரவுகளும் இல்லை. அந்தவகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை (இன்று) முன்னெடுக்கப்படவுள்ள இந்தப் புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டம், புதிய முறையில் முன்னெடுக்கப்படவுள்ளதால் சகலருக்கும் பயனுள்ளதாக அமையும்.
21 வருடங்களின் பின்னர் இந்த வேலைத்திட்டம், நாளை (இன்று) முன்னெடுக்கப்படுகின்றது.
இதன்போது, கட்சியில் இணைந்துகொள்ள விரும்பும் புதிய உறுப்பினர்களுக்கு விண்ணப்பப் படிவமொன்று வழங்கப்படும். இந்த படிவத்தை பூரணப்படுத்திக் கொடுக்கும்போது, கட்சி அங்கத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில், இலத்திரனியல் அங்கத்துவ உரிம அட்டை வழங்கப்படும். ஆரம்ப காலத்தில் வெறும் அட்டைகளே வழங்கப்பட்டன. இதில் பல சிக்கல்கள் உள்ளதால், இலத்திரனியல் அட்டையை வழங்கி, கட்சி அங்கத்தவர்களின் உரிமத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago