Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜூன் 07 , பி.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.ஏ.ஜோர்ஜ்
கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ வீரர்கள், பாதுகாப்புத் தொடர்பான விசேட பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே, அம்முகாமில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
'சாலாவ முகாமில், இராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவது வழமை. பயிற்சியில் ஈடுபடாமல் இருந்தால் அனைத்தையும் மறந்துவிடக்கூடிய நிலை ஏற்படும்.
கிரிக்கெட் வீரரொருவர், வருடக்கணக்கில் விளையாடாமல் இருந்து விட்டு திடீரென்று களத்தில் இறங்கினால், அவரால் சிறப்பாக விளையாட முடியாதல்லவா? அதனைப்போலவே, இராணு வீரர்களுக்கும் பயிற்சியென்பது அவசியம்' என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி கூறியதில் இருந்தே, மேற்படி சந்தேகம் எழுந்துள்ளது.
'இதேவேளை, கொஸ்கம இராணுவ முகாமில் ஏற்பட்டது 'அதிர்ஷ்ட வெடிப்பு' ஆகும். அதனால் தான், ஒருவர் மட்;டும் பலியாக, ஏனைய வீரர்கள் தப்பிவிட்டனர்' என்றும் பாதுகாப்பு செயலாளர் கூறினார்.
பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில், நேற்று (07) ஊடவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது, கொஸ்கம தீ விபத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். 'இந்தத் தீ விபத்து இடம்பெறுவதற்கு முன்னர், இராணுவத்தினருக்கான விசேட நிகழ்வொன்று இடம்பெற்றதாகவும், அங்கு சென்றதாலேயே இராணுவ வீரர்கள் பாதிப்பின்றி உயிர்த் தப்பியதாகவும் கூறப்படுகின்றதே, இது உண்மையா?' என ஊடகவியலாளரொருவர் கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பாதுகாப்பு செயலாளர், 'இந்த அனர்த்தம் ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் முழுமையான விவரம் தெரியாமல் எதுவும் கூற முடியாது. இந்த வெடிப்பு, அதிர்ஷ்டமான வெடிப்பு என்றுதான் சொல்லவேண்டும். இந்த ஆயதக் களஞ்சியசாலையானது, மக்கள் குடியிருப்பு உள்ள பிரதேசத்தில் இருந்தமை தொடர்பில் யாரையும் குற்றஞ்சுமத்த முடியாது. முன்னாள் ஆட்சியாளர்களை குற்றஞ்சாட்டுவதை விட, அடுத்து செய்ய வேண்டியவைகளை நாம் தீர்மானிக்க வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .