2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

​“ஜெ”க்கு பதிலாக “ஓ”கையெழுத்திடுவார்

George   / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக முதலமைச்சரின் அலுவலக கோப்புகளில் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கையொப்பமிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் பதிக்கப்பட்டு கடந்த 3 வாரங்களுக்கு மேலாக அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முதல்வர் இல்லாததால் அரசுப் பணிகளில் தொய்வு ஏற்பட்ட நிலையில், பல்வேறு தலைவர்களும் பதில் முதல்வரை நியமிக்க வேண்டும் என்று கோரி வந்தனர். இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் வசமிருந்த அனைத்து துறைகளும் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்படுவதாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவித்தார்.  

இதன் தொடர்ச்சியாக முதல்வர் அலுவலக கோப்புகளில் ஓ.பன்னீர்செல்வம் கையொப்பமிடுவதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இனிவரும் நாட்களில் முதலமைச்சரின் அலுவலக கோப்புகளில் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கையொப்பமிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக முக்கிய ஆவணங்களில் அரசு அதிகாரிகள் கையொப்பமிட்ட பிறகு இறுதியில் முதல்வர் கையெழுத்திடுவார். தற்போதுள்ள சூழ்நிலைப்படி, முதல்வர் அலுவலக கோப்புகளில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் கையொப்பமிடுவார் என்று தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் அரசாணை பிறப்பித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .