Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஜூன் 09 , மு.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 32 பேர் கைச்சாத்திட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் செவ்வாய்க்கிழமை (07) சமர்ப்பிக்கப்பட்டுள்ளதென முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நேற்று (08) கூறினார்.
பொரளை என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில், நேற்று நடைபெற்ற ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், 'அரசியலமைப்புத் திருத்தத்தின் 148ஆவது உறுப்புரையை மீறும் வகையில், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டை நிறைவேற்றிக்கொள்வதற்கு, மேற்படி செயலாளர் நாயகம் உதவியுள்ளதால், நாடாளுமன்றத்தின் உன்னதத்தன்மைக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது' என்றார்.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, டளஸ் அலகப்பெரும, மஹிந்தானந்த அளுத்கமகே, கெஹெலிய ரம்புக்வெல்ல, சீ.பீ.ரத்நாயக்க, காமினி லொக்குகே, பிரசன்ன ரணதுங்க, பிரசன்ன ரணவீர, வீரகுமார திசாநாயக்க, நிரோஷன் பிரேமரத்ன, சிசிர ஜயகொடி, ரஞ்சித் டீ சொய்சா, டீ.வி.சானக்க, கீதா குமாரசிங்க, தாரக்க பாலசூரிய, பத்ம உதயசாந்த குணசேகர, வாசுதேவ நாணயக்கார, உள்ளிட்ட பலர் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .