2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘பணிப்பகிஷ்கரிப்பின்போது பாதித்தோருக்கு சட்ட உதவி வழங்குவோம்’

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 05 , மு.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் பஸ் சங்கத்தால் கடந்த வெள்ளிக்கிழமையன்று முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையால் பிரச்சினைக்கு உள்ளான மற்றும் அவர்களின் தாக்குதலால் காயமடைந்தவர்களுக்கு சட்ட உதவியை வழங்குவதற்கு, ஜாதிக ஹெல உறுமய முன்வந்துள்ளது.  

 

இது தொடர்பாக கட்சியின் தேசிய அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நிஷாந்த வர்ணசிங்க தெரிவித்ததாவது,  

“அரசியல் நோக்கம் கொண்டு நடத்தப்பட்ட இந்த பணிப்பகிஷ்கரிப்பின் மூலம், 1,000க்கும் மேற்பட்டோர் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தனர். இந்தப் பகிஷ்கரிப்பு நடவடிக்கை நியாயமற்றதாகக் காணப்பட்டது மாத்திரமல்லாது, தேவையற்ற கோரிக்கைகளையும் அரசியல் நோக்கம் கொண்டதாகவும் அமைந்திருந்தது” என்று அவர் கூறினார்.  

 “இந்த கஷ்டமான நேரத்தில், பொதுமக்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையினர் ஒரு சிறந்த சேவையை வழங்கியிருந்தனர். தனியார் பஸ் ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலின் போது, பயணிகளும் இ.போ.ச சாரதிகளும் காயங்களுக்கு உள்ளானர். எனவே, தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு ஜாதிக ஹெல உறுமய சட்ட உதவிகளை வழங்கும்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .