2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘பிரச்சினைக்குத் தீர்வு காண அரசியல் தலையீடு அவசியம்’

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 05 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசா காலம் தற்காலிகமாக இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டாலும், தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை எனவும் அரசியல் உரிமை மற்றும் இலங்கைப் பிரஜை என்ற ​கோரிக்கைகளை தான் முன்வைத்ததாகவும், முன்னிலை சோஷலிச கட்சியின் அரசியல் குழுத் தலைவர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினையில் அரசியில் தலையீடு அவசியமாகும் என்றும், அவ்வாறு இல்லாவிட்டால் இன்றி சட்டத்தின் ஊடாக அது நிறைவேற்றப்படமாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார். 

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண ​கொள்கையளவில் தீர்வு தேவை என அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் எனினும், இன்னும் அது தொடர்பிலான செயற்றிட்டம் உருவாக்கப்படவில்லை எனவும் குணரட்னம் குறிப்பிட்டுள்ளார். 

அனுமதியின்றி இலங்கையில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னிலை சோஷலிசக் கட்சியின் குமார் குணரட்னத்துக்கு, குறைந்த வேலைகளுடன் கூடிய ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து கேகாலை நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில், ஒரு வருட சிறைத் தண்டனையை பூர்த்தி செய்த குமார் குணரட்னம், அநுராதபுர சிறைச்சாலையில் இருந்து, வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .