Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Kanagaraj / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல், வடமேல் மற்றும் ஊவா ஆகிய மூன்று மாகாண சபைகளின் முதலமைச்சர்களும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளமையால் அந்த மாகாண சபைகளின் அமைச்சரவை கலைந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய முதலமைச்சர் மூவர் தெரிவு செய்யப்பட்டு அந்த மூவரும் பதவிப்பிரமாணம் செய்யவேண்டும் என்பதுடன் அமைச்சரவையும் பதவிப்பிரமாணம் செய்யவேண்யுள்ளதாக அறியமுடிகின்றது.
3 முதலமைச்சர்கள் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் சிக்கல்கள் தோன்றியுள்ளமையால் அவற்றை நிரப்புவது தொடர்பில் மூன்று மாகாண சபைகளின் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
இதன்பிரகாரம், வெற்றிடங்கள் நிலவுக்கின்ற மூன்று மாகாண சபைகளுக்கான முதலமைச்சர் பதவிகளுக்கு புதியவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை நியமிக்கப்படுவர்கள் என்றும் அந்த நியமனத்தின் பின்னர் முதலமைச்சர்களும், மாகாண அமைச்சரவையும் அந்தந்த மாகாணங்களின் ஆளுநர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளனர் என்றும் தெரியவருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
17 May 2025