2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘முடியவே முடியாது’

Princiya Dixci   / 2016 நவம்பர் 08 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வேறு கட்சிகளின் உறுப்புரிமைகளைப் பெற்றுக்கொண்டிருக்கின்ற உறுப்பினர்களின் உறுப்புரிமையை இரத்துச் செய்வன் ஊடாகவோ அல்லது வேறெந்தவொரு செயற்பாடுகளின் ஊடாகவோ, புதிய கட்சிக்கு உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையை நிறுத்தவே முடியாது” என்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.  

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியில் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள இருக்கின்றவர்களில் பெரும்பாலானோர், வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் என்றும் அவ்வாறானவர்கள் புதிய கட்சியின் உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட அந்தநேரத்திலேயே, உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

புதிய கட்சியில் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தில் ஆரம்ப உறுப்பினர்கள் இருக்கும் குழுவில், தானே முதலாவது வரிசையில் இருப்பதாகவும், அவர் மேலும் சுட்டிக்காட்டினார். புதிய கட்சியானது, மாவட்ட மட்டத்தில் தனது செயற்றிட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதே நேரத்தில், கட்சிக்கு 10 இலட்சம் உறுப்பினர்களை இணைத்துகொள்ளும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.  

“இவ்வாறான நிலையில், புதிய கட்சியில் உறுப்பினர்களாக இணைத்துகொள்ளப்படவுள்ள ஏனைய கட்சிகளின் தலைவர்கள் அல்லது உறுப்பினர்களைக் கைதுசெய்வது, சிறையிலடைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, ஐ.தே.கவைச் சேர்ந்த பிரதியமைச்சரொருவர் தெரிவித்துள்ளார்.  எது எவ்வாறாயினும், புதிய கட்சிக்கு ஒரே தறுவாயில் 10 இலட்சம் உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்” என்றும் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .