2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

'வடக்கின் நிலைக்கு மஹிந்தவே காரணம்'

Gavitha   / 2016 ஓகஸ்ட் 25 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

'முன்னாள் அரசாங்கம் வடக்கில் முன்னெடுத்த அபிவிருத்தித் திட்டங்களால் வெளிநாட்டவர்களும் கொழும்பில் உள்ளவர்களுமே பயன்பெற்றார்கள். வடக்கு மக்களோ வறுமையில் திண்டாடினார்கள்' என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

'நல்லாட்சி அரசாங்கம், தற்போது வடக்கு மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது' என்றும் அவர் கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்று புதன்கிழமை நடைபெற்றபோது அவர் இதனைக் கூறினார்.

'யுத்தத்தின் பின்னர் வடக்கை அபிவிருத்திச் செய்கின்றோம் என்று கூறி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒப்பந்தத்தை வெளிநாட்டு ஒப்பந்தகாரர்களுக்கும், உப குத்தகையை கொழும்பில் உள்ளவர்களுக்கும் கொடுத்தார்.

குறைந்தது இந்த உப ஒப்பந்தங்களையாவது வடக்கு மக்களுக்குக் கொடுத்திருந்தால் அங்குள்ளவர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைத்து பொருளாதாரத்தில் முன்னேறியிருப்பார்கள்.

இல்லாவிட்டால், இன்று வீடு, தொழில் இல்லாத நிலையில் அந்த மக்கள் இருந்திருக்க மாட்டார்கள். பாரிய வீதிகளை மஹிந்த அமைத்தாலும், அதில் செல்ல சைக்கிள் கூட வடக்கு மக்களிடம் இருக்கவில்லை. அடிக்கல் நாட்டுவதற்கும், திறப்பு விழா என்றுக் கூறிக்கொண்டு கொழும்பில் உள்ளவர்கள் மாத்திரம் சென்று வந்தனர்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X