2025 மே 22, வியாழக்கிழமை

88 வயதான தாயைத் தவிக்கவிட்ட 8 பிள்ளைகளுக்கு வலைவீச்சு

Thipaan   / 2015 டிசெம்பர் 29 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

88 வயதான தாயை, சோறு, தண்ணீர் இல்லாமல் தவிக்கவிட்ட எட்டுப்பிள்ளைகளையும் தேடி பொலிஸார், வலை விரித்துள்ளனர்.

குறித்த தாய், வறக்காபொல, உடபாகே பிரதேசத்தில் சிறிய மண்குடிசையில் தன்னந்தனியாக இருந்போது, வறக்காபொல பொலிஸார், 28 ஆம் திகதியன்று மீட்டுள்ளனர்.

பொலிஸ் அவசர சேவைப்பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்தே, அத்தாயை தாம் மீட்டுள்ளதாகவும், அத்தாய் பல நாட்களாக சோறு, தண்ணீர் இல்லாமல் பட்டினி கிடந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரினால் காப்பாற்றப்பட்ட அந்தத் தாய், வறக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், வயோதிபத் தாயைக் கைவிட்டுச்சென்ற பிள்ளைகள் எட்டுப்பேரையும் தேடி வலைவிரித்துள்ளதாகவும் அறிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X