Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விசாரணைக்கு அழைத்து, அவர் ஏதோ தவறு செய்துள்ளார் என்று மக்களுக்குக் காண்பித்து அரசியல் இலாபம் பெறுவதற்கு அரசாங்கம் முயற்சித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, 5 விடயங்கள் சம்பந்தமாக வாக்குமூலமளிப்பதற்கு ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அழைத்திருந்தது.
வெற்றிடம் இல்லாத நேரத்தில் அனுர சிறிவர்தனவை சுயாதீன தொலைக்காட்சியின் தலைவராக நியமித்தமை ஒரு விடயமாகும்.
சுயாதீன தொலைக்காட்சியின் தலைவரை நியமிப்பது ஜனாதிபதியல்ல, அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்தின் பங்கு உரிமைகளை கொண்டுள்ள திறைசேரியின் செயலாளரே தலைவரை நியமிப்பார். உள்ளிட்ட விவரங்கள் அதில் அடங்குகின்றன. எனினும், 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட்டார்.
தேர்தல் நடைபெறும் காலத்தில் விளம்பரங்களை எந்த ஊடக நிறுவனங்களுக்கு வழங்குவது, அப்படி வழங்கப்பட்ட எத்தனை விளம்பரங்கள் ஒளிப்பரப்பட்டன என்பதை அவதானிக்க தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரால் முடியாது. அத்துடன், ஊடக நிறுவனங்களுக்கு விளம்பரங்களை வழங்குவது தேர்தல் போட்டியிடும் வேட்பாளர் அல்ல. அவர் அங்கம் வகிக்கும் அரசியல் அமைப்பு அல்லது கட்சி, விளம்பரங்களை தயாரிக்க விளம்பர நிறுவனங்களுக்கு வழங்கும்.
அவை, அவற்றை, ஊடக நிறுவனங்களுக்கு வழங்கும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரோ அவரது அரசியல் கட்சியோ இது சம்பந்தமாக ஊடக நிறுவனங்களுடன் நேரடியாக சம்பந்தப்படுவதில்லை என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
33 minute ago
1 hours ago
1 hours ago