2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வௌிநாட்டு பணியாளர்களுக்கு ஓய்வூய்தியம்

Administrator   / 2016 நவம்பர் 30 , மு.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரவு - செலவுத் திட்ட யோசனைக்கு அமைய,  வௌிநாட்டு பணியாளர்களுக்கு  ஓய்வூய்தியம் வழங்கும் திட்டம் அடுத்த வருடம் முதல் அமுல்படுத்தப்படும் என வௌிநாட்டு வே​லைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக பதிவு செய்து வௌிநாடு செல்லும் பணியாளர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் உள்ளடங்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது,  இம்முறை வரவு - செலவுத் திட்டத்தில், தமது அமைச்சுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் அது தொடர்பில் கவலையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அமைச்சர், இதனை ​நேற்றுத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .