2025 மே 20, செவ்வாய்க்கிழமை

3 விபத்துக்களில் மூவர் பலி

Gavitha   / 2015 நவம்பர் 10 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு, வீரக்கெட்டிய மற்றும் தெபுவன ஆகிய மூன்று பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை (09) இடம்பெற்ற வெவ்வேறு விபத்துக்களில் சிறுவன் ஒருவன் உட்பட மூவர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸ் தலைமையலுவலகம் அறிவித்துள்ளது.

இவை தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நீர்கொழும்பு

கொழும்பு-சிலாபம் பிரதான வீதியில் காமினி மாவத்தையில் பாதசாரி கடவை அண்மையில் பாதையை கடந்துகொண்டிருந்த நீர்கொழும்பை வசிப்பிடமாக கொண்ட 66 வயதான மேரி எனசிலி சில்வா என்பவர் மீது தனியார் பஸ்ஸொன்று மோதியதில் அவர் மரணமடைந்துள்ளார்.

சிலாபத்திலிருந்து கொழும்பு பக்கமாக பயணித்த தனியார் பஸ்ஸே நேற்று பிற்பகல் 11.20க்கு அவர் மீது மோதியுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த அவர், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே மரணமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தனியார் பஸ்ஸின் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீரக்கெட்டிய

வீரக்கெட்டிய தெபொக்காவ வீதியில் அம்பகொரட்டுவ சந்திப்பகுதியில், வீரகெட்டிய பகுதியிலிருந்து தெபொக்காவ பக்கமாக பயணித்த வானொன்று வீதியை கடக்க முயன்ற 8 வயதான சிறுவன் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

திங்கட்கிழமை (09) மாலை 4.45 மணியளவிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயங்களுக்குள்ளான சிறுவனை தங்கல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்துள்ளான்.

சம்பவத்தையடுத் வானின் சாரதியை கைதுசெய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்தனர்.

தெபுவன

ஹொரணை, மதுகம பிரதான வீதியில் வரகாகொட விகாரைக்கு முன்னால் வைத்து மோட்டார் சைக்கிளொன்று பெண்ணை மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் திங்கட்கிழமை (09) பகல் 1 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான குறித்த பெண், ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளின் சாரதி கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X