2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

25,000 விவகாரம்: உரிய தரப்பினருடன் கலந்தாலோசித்த பின்னர் முடிவு

Gavitha   / 2016 டிசெம்பர் 03 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசிக்காது, போக்குவரத்து குற்றச்சாட்டுகளுக்கான அபராதத் தொகை அதிகரிக்காது என்று ஜனாதிபதி மைத்திபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக, தனியார் பஸ் சங்கம் இன்று சனிக்கிழமை (03) தெரிவித்தது.

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினருடன் கலந்துரையாடல் இடம்பெற்ற பின்னரே, அபராதத் தொகை அதிகரிக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பான  இறுதி முடிவு எடுக்கப்படும் என்று இலங்கை தனியார் பஸ் சங்கத்தின் செயலாளர் அர்ஜுன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.

எனவே பஸ் உரிமையாளர்களுடன் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கை தொடர்பில் ஆராய்வதற்கு, சிறப்பு குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .