2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘TIDஇல் சித்திரவதை முகாம்கள் இல்லை’

Princiya Dixci   / 2016 நவம்பர் 03 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

“நல்லாட்சி அரசாங்கத்தில் இரகசிய சித்திரவதை முகாம்கள் என எவையும் இல்லை. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார், இரகசிய சித்திரவதை முகாம்களில் வைத்து 600 பேரைத் துன்புறுத்தியதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை” என, அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதாரஅமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்தச் செய்தியாளர் மாநாடு, கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் தி​ணைக்களத்தில், நேற்றுப் புதன்கிழமை (02) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

“இலங்கையில் ரகசிய சித்திரவதை முகாம்கள் இயங்கிவருவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் புதிதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்படடுள்ளதே?” என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார். 

 “யுத்தக்காலத்தில் இராணுவம் மற்றும் விடுதலை புலிகளால் ரகசிய முகாம்கள் இருந்தது உண்மை. என்றாலும் நல்லாட்சி அரசியல் இரகசிய முகாம் என எதுவும் இல்லை. கைதுசெய்யப்படுபவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படுகின்றனர். கைதுசெய்ப்பட்டவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாகவோ, சட்டவிரோத கைதுகள் தொடர்பிலோ எந்தவித முறைபாடுகளும் பதிவாகவில்லை” என்றும் அவர் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .