2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

10 மணிநேர மின்வெட்டு உண்மையா?

Freelancer   / 2022 டிசெம்பர் 21 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

10 மணிநேர மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை அனல் மின்உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரி கொள்வனவில் ஏற்படும் தாமதத்தினால், ஜனவரியில் 10 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன நேற்று தெரிவித்திருந்தார்.

மேலும், குறித்த கருத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவும் நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த கருத்துக்கு பதிலளித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர், 

எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கட்டாயம் மின் கட்டணத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும், 10 மணிநேர மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் குறிப்பிட்டார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X