Editorial / 2019 மே 31 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிரோஷினி விஜயராஜ்
சினமன் கிரான்ட் ஹோட்டலின் தற்கொலைதாரியான மொஹமட் இன்ஹாப் அஹமட் என்பவருக்குச் சொந்தமான வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள் தொடர்பான வழக்கின் 11ஆவது சந்தேக நபர், கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில், நேற்று (30) ஆஜர்படுத்தப்பட்டார். மாவனல்ல பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட ஹிங்குல பகுதியைச் சேர்ந்த மொஹமட் உவைஸ் மொஹமட் சல்மான் நூல் பாரீஸ் என்பவரே ஆஜர்படுத்தப்பட்டார்.
இத்தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்களை கைதுசெய்யும் போது மூவர் தப்பியோடியிருந்தனர். அவர்களில் ஒருவரே, குறித்த சந்தேக நபரெனவும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு பொலிஸார் கொண்டுவந்தனர்.
வழக்கை ஆராய்ந்த மேலதிக நீதவான் பிரியந்த லியனகே, சந்தேக நபரின் அலைபேசி உரையாடல் தொடர்பான அறிக்கையை ஜூன் 14ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.
29 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
44 minute ago