Mayu / 2026 மார்ச் 29 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐபிஎல் 2026 தொடரின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி அபார வெற்றி பெற்ற நிலையில், மைதானத்தில் அரங்கேறிய சில நெகிழ்ச்சியான மற்றும் உற்சாகமான தருணங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அதற்கமைய, நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணியின் வெற்றியை நேரில் கண்டு ரசிக்க பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுடன், ஆர்சிபி மகளிர் அணி வீராங்கனைகளும் மைதானத்திற்கு வருகை தந்திருந்தனர். கேப்டன் ஸ்மிருதி மந்தனா, இளம் வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டீல் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் உற்சாகமாகப் போட்டியை ரசித்ததோடு, விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தைக் கண்டு கொண்டாடினர்.
மைதானத்தில் ஒருபுறம் கொண்டாட்டங்கள் இருந்தாலும், மற்றொரு புறம் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. கடந்த ஆண்டு ஸ்டேடியத்திற்கு வெளியே நடந்த எதிர்பாராத விபத்தில் உயிரிழந்த 11 தீவிர ஆர்சிபி ரசிகர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, மைதானத்தில் 11 இருக்கைகள் காலியாக விடப்பட்டிருந்தன.
உயிரிழந்த அந்த ரசிகர்களின் நினைவாகச் செய்யப்பட்ட இந்தச் செயல், மைதானத்தில் இருந்தவர்களையும் இணையவாசகர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. "வெற்றிகளை விட மனிதநேயமே முக்கியம்" என ரசிகர்கள் இந்தச் செயலைப் பாராட்டி வருகின்றனர்.
8 minute ago
21 minute ago
32 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
21 minute ago
32 minute ago
2 hours ago