2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

12 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாவுடன் ஒருவர் கைது

Freelancer   / 2025 ஏப்ரல் 09 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் சுமார் 305 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமராட்சி கிழக்கு, உடுத்துறை கடற்பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த படகு ஒன்றைக் கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அவதானித்து குறித்த படகைக் கடலினுள் வழிமறித்து சோதனையிட்டபோது அதற்குள் கேரள கஞ்சா பொதிகள் காணப்பட்டன.

அதனை அடுத்து படகில் இருந்த வடமராட்சி கிழக்கு, முள்ளியான் பகுதியைச் சேர்ந்த படகோட்டியைக் கைது செய்த கடற்படையினர் கஞ்சா போதைப்பொருளுடன் படகையும் கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா கடல் நீரில் நனைந்த நிலையில் காணப்பட்டது என்றும், ஈரத்துடன் அதன் எடை 304 கிலோ 600 கிராம் என்றும் தெரிவித்த கடற்படையினர், அதன் பெறுமதி சுமார் 12 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டனர்.
 
மீட்கப்பட்ட கேரள கஞ்சா மற்றும் படகு என்பவற்றுடன், கைது செய்யப்பட்ட நபரையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் கடற்படையினர் ஒப்படைத்தனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X