Editorial / 2026 மே 06 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

குளத்தில் நீராடிக்கொண்டிருந்த 12 வயது சிறுவனுடைய மலக்குடலில், பாசி மற்றும் தாமரைத் தண்டினைப் பலவந்தமாக நுழைத்ததாகக் கூறப்படும் இரண்டு மாணவர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம்,
கைது செய்யப்பட்டவர்கள்: நவகத்தேகம, பலகதவெவ பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய ஒரு மாணவனும், மஹபெத்தாவ பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய மற்றொரு மாணவனும் ஆவர்.
சிறுவன் குளத்தில் நீராடிக்கொண்டிருந்த போது, அந்த வழியாகச் சென்ற இரண்டு சந்தேக நபர்களும் சிறுவனை அணுகியுள்ளனர். பின்னர் அச்சிறுவனை நிர்வாணப்படுத்தி, குளத்திலிருந்த பாசி மற்றும் தாமரைத் தண்டினைச் சிறுவனுடைய மலக்குடலில் பலவந்தமாக நுழைத்துள்ளமை பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களிடம் மேலதிக விசாரணைகளை நவகத்தேகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
30 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
43 minute ago