2026 ஜனவரி 12, திங்கட்கிழமை

13.1 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய தபால் துறை

Freelancer   / 2026 ஜனவரி 12 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தபால் திணைக்களம் 2025 ஆம் ஆண்டில் திறைசேரியினால் நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்குகளை கடந்து, நீண்டகால தேக்க நிலைக்குப் பின்னர் ஒரு பாரிய மீண்டெழுதலைப் பதிவு செய்துள்ளது.

2025 ஆம் ஆண்டில் இலங்கை தபால் திணைக்களம் 13.1 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது.

இது திறைசேரி எதிர்பார்த்த இலக்கை விட அதிகமானது என தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அஞ்சல் ஊழியர்களுக்கான நிரந்தர நியமனங்கள் 2025 இல் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி ஜூன் 2025 இல் 378 உப தபால் அதிபர்கள் நிரந்தர நியமனங்களைப் பெற்றனர்.

அத்துடன் செப்டம்பரில், 1,000 தபால் உதவியாளர்களின் நியமனங்கள் முறைப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில் திறந்த போட்டி மூலம் 600 தபால் சேவை அதிகாரிகளை பணியமர்த்துவதற்கான ஆட்சேர்ப்பு நடந்து வருவதாகவும், பெப்ரவரி 2026 இல் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன என எதிர்பார்க்கப்படுவதாகவும் தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .