2024 மே 21, செவ்வாய்க்கிழமை

14ஐ அழைத்துச் சென்ற 20 சிக்கியது

Freelancer   / 2023 மார்ச் 18 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

மல்லாகம் பகுதியச் சேர்ந்த பாடசாலைக்குச் செல்லும் 14 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து குடும்பம் நடத்த அழைத்து சென்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் சிறுமியும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட இளைஞன் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த  20 வயதுடைய நபர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

14 வயது சிறுமி பாடசாலைக்கு செல்ல முற்பட்ட போது சிறுமியை அழைத்துக் கொண்டு புதுக்குடியிருப்புக்கு பகுதிக்கு சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸில் சிறுமியின் பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

தெல்லிப்பளை  பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் உதயபாலா தலைமையில் புதுக்குடியிருப்பு பகுதிக்கு சென்ற பொலிஸ் குழுவினர் சிறுமியை மீட்டவுடன் இளைஞனை கைது செய்து அழைத்து வந்துள்ளனர்.

இருவரையும் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்ப்படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .