Editorial / 2020 டிசெம்பர் 07 , பி.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கொவிட்-19 தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 142ஆக உயர்ந்துள்ளது.
உரிய வசிப்பிட முகவரி தெரியாத கொழும்பு பகுதியை சேர்ந்த 62 வயதான ஆண் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுடன் ஏற்பட்ட நியுமோனியா நிலைமையே உயிரிழப்புக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு 13 ஜம்பட்டா வீதியைச் சேர்ந்த 77 வயதான ஆண் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
கொவிட்-19 தொற்றுடன், நீரிழிவு நோய் காணப்பட்டமையே இந்த உயிழப்புக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 minute ago
24 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
24 minute ago
50 minute ago