2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

15 அன்று திறக்கப்படும் தெற்கு பாடசாலைகள்

Freelancer   / 2021 செப்டெம்பர் 29 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் மாகாணத்தில் 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 514 பாடசாலைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் திறக்க எதிர்பார்த்துள்ளதாக தென் மாகாண கல்வியமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்தார்.

வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடவும், பிரச்சனைகளை கண்டறிந்து தென் மாகாண கல்வி அமைச்சுக்கு தெரிவிக்கவும் கொரோனா ஒழிப்பு செயலணியினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

6ஆம் திகதி முதல் பாடசாலைகளைச் சுத்தம் செய்யவும், கிருமி நீக்கம் செய்யவும் குழு திட்டமிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளிடமிருந்து தேவையான உதவிகள் பெறப்படும் என்று நம்பப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X