Editorial / 2019 ஜூலை 23 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவசர திருத்தப்பணிகளின் காரணமாக கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் இன்று 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது
மாலை 06.00 மணி முதல் நாளை காலை 10.00 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.
அதன்படி கொழும்பு 03, 04, 05, 06 மற்றும் ஹோகந்தர ஆகிய பிரதேசங்களில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.
இந்தக் காலப்பகுதியில் கொழும்பு, கல்கிஸை, கோட்டே மற்றும் கடுவலை மாநகர சபைக்கு உட்பட்ட பகுதி ஆகிய பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என அந்த சபை அறிவித்துள்ளது.
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்பட உள்ள அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாகவே நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை சுட்டிகாட்டியுள்ளது.
9 minute ago
29 minute ago
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
29 minute ago
36 minute ago
2 hours ago