Editorial / 2026 ஜனவரி 01 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்
இலங்கை கடற்படையினர், பொலிஸ் மற்றும் பொலிஸ் அதிரடிப் படை ஆகியவையுடன் இணைந்து, கொழும்பு துறைமுகம் மற்றும் ராகமவில் உள்ள பெரலந்த பகுதியில் இரு தினங்கள் கூட்டுத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன் போது சட்டவிரோத விற்பனைக்காக தயார் நிலையில் வைத்திருந்த சுமார் 16,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 02 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கொழும்பு துறைமுகத்தில், கொழும்பு துறைமுக காவல்துறையுடன் இணைந்து, மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நடத்திய நடவடிக்கையின் போது, சட்டவிரோத விற்பனைக்காக தயார்நிலையில் வைத்திருந்த சுமார் 1000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 01 ஒரு சந்தேக நபரும், ராகம பெரலந்த பகுதியில், கோனஹேன பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையுடன் இணைந்து இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நடத்திய நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக வைத்திருந்த 15,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 01 சந்தேக நபருமாக, இவ்வாறு 16,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 02 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட 54 மற்றும் 65 வயதுடைய சந்தேக நபர்கள் பெலியத்த மற்றும் ராகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேக நபர்களையும் வெளிநாட்டு சிகரட்டுகளையும் கொழும்பு துறைமுக காவல்துறையினரிடமும் ராகம காவல் நிலையத்திடமும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
07 Mar 2026