2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் ‘அது கட்’

Ilango Bharathy   / 2021 ஜூலை 12 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா:

பரப்பளவில், நான்காவது பெரிய மாநிலமான உத்தர பிரதேசம், மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் மக்கட் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், உத்தர பிரதேசத்தில் புதிய சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

'இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால், அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது எனவும்,  அரசு சலுகைகள் இரத்து செய்யப்படும் எனவும்,  தேர்தலில் போட்டியிட முடியாது' எனவும் குறித்த சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இரண்டுக்கு உட்பட்ட குழந்தை மட்டுமே உள்ளவர்களுக்கு வட்டியில்லாக் கடன், குடிநீர், மின்சாரம், வீட்டு வரிகளில் தள்ளுபடி, காப்பீடு உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் இப் புதிய சட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

 குறிப்பாக விவாகரத்துப் பெற்றோர், விதவையர் போன்றவர்கள் குறித்து இம் மசோதாவில் விளக்கம் அளிக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X