Editorial / 2020 டிசெம்பர் 14 , மு.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிரான் பிரியங்கர
புத்தளம்- கல்லாறு கடற்படை முகாமுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட 2,404 கிலோ கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.
10 மில்லியன் ரூபாய் பெறுமதியான குறித்த மஞ்சளைக் கடத்தி வரப் பயன்படுத்தப்பட்ட 'டச்' படகுடன் இந்தியர்கள் மூவர், இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்லாறு கடற்பரப்பிலிருந்து 27 கடல்மைல் தொலைவில், நேற்று (13) அதிகாலை, 64 உரப்பைகளில், பொதி செய்யப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டது எனக் கடற்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் 37, 40, 49 வயதுடையவர்கள் என்றும் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை மீறியுள்ள இவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றும் கடற்படையினர் தெரிவித்தனர்.
49 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago
4 hours ago