Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2024 ஜூன் 17 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
விமானங்களில் பயணிகளிடம் நகைகளை திருடினார் என்றக் குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லியைச் சேர்ந்தவர் ராகேஷ் கபூர், ஐதராபாத்-புமடெல்லி, பெங்களூரு, மும்பை மற்றும் பிற நகரங்களுக்கு இடையே உள்ளூர் உள்நாட்டு விமானங்களில் அடிக்கடி பயணம் செய்தார்.
விமானத்தில் பயணித்த பெண்களை அடையாளம் கண்டு, தன்னுடன் எடுத்துச் சென்ற தோள் பையை பெண் பயணிகளின் கைப்பைகளுக்கு அருகில் ராகேஷ் வைத்திருந்தார்.
"பயணத்தின் போது, பெண்கள் கழிவறைக்குச் செல்லும்போதெல்லாம், ராகேஷ் அவர்களின் பைகளைத் திறந்து, நகைகள் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை திருடினார்.
விமானங்களில் நடந்த திருட்டு குறித்து ஐதராபாத் விமான நிலைய பொலிஸார் தீவிர விசாரணை நடத்தினர். விமான நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை பொலிஸார் அவதானித்து, ராகேஷ் கபூரை அடையாளம் கண்டனர்.
அவரை பிடித்து விசாரித்ததில் விமானங்களில் அவர் பயணிகளிடம் நகை, விலை உயர்ந்த பொருட்கள் திருடியது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவரை கைது செய்தனர் மேலும் அவரிடம் இருந்து ஒரு கிலோ கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். அவருடைய கூட்டாளி தினேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.
"இதுவரை ராகேஷ் 100 நாட்களில் 200 விமானங்களில் பயணம் செய்துள்ளார், கிட்டத்தட்ட எல்லா விமானங்களிலும் திருட்டில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது ஐதராபாத் மற்றும் ரச்சகொண்டாவில் 12-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன "என்று பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .