Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜூலை 31 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர். அனுருத்தன்)
"உலகில் ஆதிவாசிகளை அழிவடையும் மக்கள் கூட்டமாக அனுதாபத்துடன் பார்க்கப்படுகின்றபோதிலும் இலங்கையில் அத்தகைய மனப்பாங்குடன் அவர்களை பார்க்கவேண்டிய நிலைமை இல்லை. அவர்கள் இந்நாட்டில் தமது மரபுரிமைகளை அனுபவித்து வருகின்றனர்" என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை உலக ஆதிவாசிகள் தின நிகழ்வுகள் பணிச்சங்கேணி சல்லித்தீவு கடற்கரையில் ஆதிவாசிகளின் தலைவர் ஊருவர்க்கே வன்னிலத்தோ தலைமையில் சடங்கு சம்பிராதயங்களுடன் நடைபெற்றபோது அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
1818 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிரகா வீர கெப்பிட்டிபொல தலைமையிலான புரட்சியில் வேடுவர்களின் பங்களிப்பு , தலதா மாளிகைக்கு தேன் வழங்கும் அவர்களின் சிறப்புரிமை, கதிர்காமத் திருவிழாவில் அவர்கள் பங்குபற்றுவது என்பன வேடுவ சமூகத்தின் பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது என ஜனாதிபதி கூறினார்.
கிழக்கு மாகன முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இவ் நிகழ்வில் அமைச்சர்கள் ஜகத் பாலசூரிய, ரி.பி.ஏக்கநாயக்க. மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல். ஏ. எம். ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண ஆளுனர் மொஹான் விஜேய விக்கிரம உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் அங்கு உரையாற்றிய ஜனாதிபதி "அன்றைய பிரிவினைவாத யுத்தம் நாட்டு மக்களை மாத்திரமல்ல ஆதிவாசிகளின் வாழ்கையிலும் பாதிப்பினை ஏற்படுத்தியது. அவர்களின் தனித்துவத்தையும் மறைக்கவும் பயங்கரவாதிகள் துணை புரிந்தார்கள்.
இன்று அச்சூழ்நிலை மாறி நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாக வாழும் சூழ் நிலை உருவாகியுள்ளது. ஜக்கிய நாடுகள் சபையானது ஆதிவாசிகளின் நலன் பற்றி கவனம் செலுத்துகிறது. ஆயுதத்தை வைத்துக்கொண்டு ஜனாதிபதி மாளிகைக்கு வருவதற்கு வன்னிலத்தோவிற்க்கு அனுமதியுண்டு. ஆதிவாசிகள் இந்த மண்ணின் சொந்தக்காரர்கள் "என்று மேலும் தெரிவித்தார்.
22 minute ago
24 minute ago
2 hours ago
2 hours ago
NAKKIRAN Monday, 01 August 2011 07:40 AM
அன்னியர்க்கு எதிராக ராஜசிங்கன், பண்டார வன்னியன், சங்கிலியன் போராடினார்கள். இவர்களுக்கு என்ன செய்தார்கள்? அவர்களின் மக்களை சிலைகளை சின்னங்களை அழித்தார்கள் . வேடுவர் மேல் அக்கறை ஈழத்தமிழர் போராட்டத்திற்கு பிறகுதான் .
Reply : 0 0
aJ Monday, 01 August 2011 07:09 PM
சிங்கள ஆதிவாசி மக்களுக்கு மறுக்கப்படும் உரிமையை பற்றி பேசும் இவர்கள் கடந்த 60 வருடம் தமிழர்களுக்கு மறுக்கப்பட்டும் உரிமை பற்றி ஏற்றுக்கொள்ளவே இல்லை ஏன் அதை பற்றி உண்மையை புரிந்து பேச கூட இல்லை. இது தான் இங்கும் இருக்கும் நிலைமை. இது தான் இங்கு தமிழர்களுக்கு இருக்கும் நிலைமை.
Reply : 0 0
xlntgson Monday, 01 August 2011 09:42 PM
ஆதிவாசிகளில் சிங்கள ஆதிவாசி தமிழ் ஆதிவாசி என்று வேற்றுமை உண்டோ? பழங்குடிகளின் சட்டம் உண்மையில் இப்போது புதுப்பிக்க வேண்டியது தான். அவர்களுக்கு எதிரான அனைத்து சட்டங்களும் மேற்கின் அனுசரணையில் தான் நடந்தது. மேற்கு பொருளாதார தடை விதித்தால் மூலிகைகளுக்கு காட்டுவாசிகளின் மிருக மற்றும் வேட்டைப் பொருட்களுக்கு தடையை நீக்கவும் அவர்களுக்கு அவற்றை இயற்கையோடு பாதுகாத்துப் பயன் பெற ஏற்பாடு செய்யவும் வரும். அலோபதி சித்த மருந்துகள்,பொருளாதார தடை விதிக்கப்பட்டால்,நவீன தடுப்பு முறைகள் சிக்கலடையும்.
தடுப்பு தடை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
24 minute ago
2 hours ago
2 hours ago