2025 நவம்பர் 09, ஞாயிற்றுக்கிழமை

மீன் வியாபாரி கொலை ; மூவர் கைது

Janu   / 2025 நவம்பர் 09 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலாங்கொடை பொது நூலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற மீன் வியாபாரியின் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒரு பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 கடந்த 4 ஆம் திகதியன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அம்பலாங்கொடை ,போரம்பை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய வருஷ விதான என்ற மீன் வியாபாரியே இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

 சிவப்பு நிற காரில் வந்த, இனம் தெரியாத துப்பாக்கிதாரிகள் இந்தக் கொலையை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் இக் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் உட்பட மூவர்  கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிதாரிகளுக்கு காரை வழங்கிய நபர் கொழும்பிலிருந்தும், கொலை செய்யப்பட்ட மீன் வியாபாரியை உளவு  பார்த்த, பெண்  கொஸ்கொடவிலிருந்தும், மற்றைய சந்தேக நபர் வதுகெதரவிலிருந்தும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X