2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

ஹம்பாந்தோட்டையை தலைநகராக்க அரசாங்கம் திட்டமிடுகிறது: ஐ.தே.க.

Super User   / 2011 ஒக்டோபர் 01 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(யொஹான் பெரேரா)

ஹம்பாந்தோட்டையை இலங்கையின் வர்த்தக தலைநகராக மாற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிடுகிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகரசபை வேட்பாளர் ஏ.ஜே.எம். முஸம்மில் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் துறைமுகம் அமைப்பதும் இத்திட்டத்தின் ஒருபகுதியாகும் என இளம் தொழில்வல்லுநர்கள் அமைப்பின் அங்கத்தவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இத்திட்டத்தினால் நாட்டின் தலைநகரான கொழும்பு பாதிக்கப்படும் எனக் கூறிய அவர் தான் மேயராக தெரிவுசெய்யப்பட்டால் கொழும்பு மாநகர சபையில் நல்லாட்சியை ஏற்படுத்துவதாக உறுதியளித்தார்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் ஊழல் அதிகரித்துள்ளது. பங்குச்சந்தையை கையாள்வதற்குகூட பொதுமக்களின் பணம் பயன்படுத்தப்படுகிறது. அரசாங்கத்திற்கு முக்கிய செய்தியை சொல்வத்கு இத்தேர்தல் பொன்னா வாய்ப்பாகும்  என அவர் கூறினார்.
 


  Comments - 0

 • siraj Saturday, 01 October 2011 11:39 PM

  உங்கள் வெற்றி உறுதி தலைவரே

  முதல்வர்
  நீங்கள்தான்

  Reply : 0       0

  Naleem Sunday, 02 October 2011 12:16 AM

  முஸ்லிம்கள் சோரம்போகாத சமுகம் என்பதை நிச்சயம் நிரூபிப்பார்கள்.

  Reply : 0       0

  Mohammed Hiraz Sunday, 02 October 2011 06:50 AM

  கொழும்புதான் வரலாறு நெடுக்க தலை நகராக இருந்ததா??? காலத்திற்கு ஏற்றாபோல் தலைநகரங்களை மாற்றுவது இயல்பானதும் எமது நாட்டின் முன்னேற்றத்திற்கு திட்டமிடபட்ட அதிவேக பாதைகள் அடங்கிய ஒரு நவீன நகரம் கண்டிப்பாக தேவை. அது அம்பாந்தோட்டையில் அமைவது யாவருக்கும் நலவே!!! சிறுபான்மையினராகிய நாம் புத்திசாலித்தனமாக இப்போதே அம்பாந்தோடையில் காணிகளில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்துவது பிரயோசனம்.

  Reply : 0       0

  Ashashi Sunday, 02 October 2011 01:10 PM

  பொறுத்திருந்து பார்ப்போம்.

  Reply : 0       0

  asker Sunday, 02 October 2011 05:02 PM

  mr.naleem அது எல்லாம் பொய் ,ரணில் விலகினால் தான் முஸ்லிம்கள் வாக்களிப்பார்கள், நாடு தற்போது அபிவிருத்தியில் உள்ளது அதற்கு நாம் ஜனாதிபதியை நாம் உற்சாகப்படுத்துவோம்.

  Reply : 0       0

  KURU Sunday, 02 October 2011 07:37 PM

  அடுத்த ஜனாதிபதி - MR.முசம்மில் வாழ்க......... தலைவா இலங்கை மக்களையும், இலங்கையையும் காப்பாத்து.

  Reply : 0       0

  Ossan Salam - Doha Sunday, 02 October 2011 08:19 PM

  யூ என் பீ தற்சமயம் வென்றால் கொழும்பு நாற்றமடிக்கத் தொடங்கும்போது தலை நகரை மாற்றுவதைத் தவிர வேறு என்ன செய்வது? எந்த நாளும் கொலம்பியா தான் தலை நகராக இருக்க வேண்டும் என்பது யார் எழுதி வைத்த சட்டம்... ரணிலுக்கும் உங்களுக்கும் கொழும்பை விட்டால் வேறு வழியில்லை போலும். தற்போதுள்ள நல்ல சூழலை கெடுக்காது, கொழும்பில் யூ பீ எப் எ யை வெற்றி பெறச் செய்து சிறந்த ஒரு நகராக மாற்ற மக்கள் முன் வர வேண்டும்.

  Reply : 0       0

  rys111222 Sunday, 02 October 2011 09:21 PM

  mr.kuru u wrong. oru pothum sirpanmai janathipathi aha முடியாது

  Reply : 0       0

  iqbal Sunday, 02 October 2011 09:22 PM

  அரசுதான் +முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்

  Reply : 0       0

  yood Sunday, 02 October 2011 10:53 PM

  mr; salam கொஞ்சம் நாகரிகமாக வார்த்தைகளை கூறுங்கள்.

  Reply : 0       0

  KURU Monday, 03 October 2011 03:17 AM

  mr . rys
  நான் கௌண்டமனியின் பாணியில் எழுதியதை தவறாக புரிந்து விட்டீர்கள்...

  Reply : 0       0

  Azeem Monday, 03 October 2011 03:46 AM

  Mussammil sir ,இது இபொழுது தானா உங்களுக்கு தெரியும்.....
  But we dnt think that..no problem he can change but i can ask him one request DO GOOD THING FOR OUR SRILANKAN'S PEOPLES.. PLEASE Dnt Make Difference between Peoples and race....

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .