A.P.Mathan / 2011 நவம்பர் 21 , மு.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கெலும் பண்டார)
இலங்கையின் பொருளாதார நிலைமைகள் பற்றி ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி- பகுதி பகுதியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையிலேயே சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளின் வருகை இடம்பெறவுள்ளது.
இவர்களின் வருகை தொடர்பாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிடுகையில்... 'எமது நாடு தற்போதுள்ள ஸ்திரமான நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி பெரும் தேவையாக இருக்கப்போவதில்லை' என்று குறிப்பிட்டார்.
'எமது பொருளாதார நிலை ஸ்திரமடைந்துள்ளது. சர்வதேச தரவுகளை ஒப்பிட்டுப் பார்த்தீர்களேயானால் எமது நாட்டின் பொருளாதார ஸ்திரநிலை போதுமானதென்பது தெளிவாகத் தெரியும்' என்றும் அவர் தெரிவித்தார்.
அப்படியானால், சர்வதேச நாணய நிதியத்தின் கடன்தொகையினை அரசாங்கம் நிராகரிக்குமா? அன்று ஆளுநரிடம் கேட்டபோது... 'எங்களுக்கு ஏற்புடையதாக இருந்தால் அந்த நிதியினை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்' என்றார்.
13 minute ago
45 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
45 minute ago
57 minute ago