Super User / 2011 நவம்பர் 27 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
நகர் புறங்களில், குறிப்பாக குருநாகல், நீர்கொழும்பு, தங்காலை, கம்பஹா, அநுராதரபும் போன்ற பகுதிகளில் தங்கச் சங்கிலிகள் கொள்ளையிடப்படுவது அதிகரித்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நகர்புறங்களில் வசிக்கும் பெண்கள் இதுதொடர்பாக விழிப்பாக இருக்குமாறும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன கூறினார்.
தங்கச் சங்கிலி கொள்ளை தொடர்பாக பொலிஸாரிடம் பல முறைப்படுகள் செய்யப்பட்டுள்ளன. இக்கொள்கைளில் மோட்டார் சைக்களில் வரும் ஒருவர் அல்லது இருவரால் மேற்கொள்ளப்படுவதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
குறிப்பாக காலை 5.30- 8.00 மணிக்கிடையிலும் மாலை 4.00 - 7.30 மணிக்கிடையிலும் இச்சம்பவங்கள் அதிகம் இடம்பெறுவதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
இத்தகைய பல சம்பவங்களில் பாதிக்கப்பட்ட சிலர் கழுத்தில் காயங்களுக்கும் ஆளானதாக பொலிஸ் பேச்சாளர் கூறினர்.
எனவே, தாம் அணியும் தங்கச்சங்கிலிகள் மற்றும் நகைகளை வீதிகளில் வெளிப்படுத்த வேண்டாம் எனவும் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளோட்டிகள் பின்தொடர்ந்தால் அருகிலுள்ள பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் அவர் கோரியுள்ளார்.
2 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago