Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 நவம்பர் 30 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
'இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் விடயத்தில் அதிக முக்கியத்துவம் காட்ட வேண்டிய உள்ளது. அத்துடன் இலங்கையில் மனித உரிமை விடயங்களில் இலங்கையில் முன்னேற்றமும் ஏற்பட வேண்டும்' என இலங்கை வந்துள்ள ஐப்பானிய முன்னாள் சமாதான தூதுவர் யசூசி அகாஷி தெரிவித்தார்.
அத்துடன், பொறுப்பு கூறல் தொடர்பில் உள்நாட்டு செயன்முறை தேவை. எனினும் அது சர்வதேச நியமங்களுக்கு ஏற்றதாக இருத்தல் வேண்டும்' எனவும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கைக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ள நிலையில் யசூசி அகாஷி, இன்று புதன்கிழமை கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர்,
'ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது தேவை கருதி மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என ஜப்பானிய அரசு எதிர்பார்க்கின்றது. அத்துடன் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முன்மொழிவுகளை இலங்கை அரசு அமுல்படுத்தும் எனவும் ஜப்பான் அரசு நம்புகின்றது.
அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஓர் முடிவு ஏற்படும் என ஜப்பான் நம்புகின்றது. இதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பதற்காக நியமிக்கப்படவுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கின்றோம்.
வடக்கில் மேற்கொள்ளப்படும் இராணுவ மயமாக்கம், இதனால் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பு தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை தன்னை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் அகாஷி குறிப்பிடும் போது, 'வாய்ப்பாடு ரீதியான தீர்வுகள் ஏற்புடையனவல்ல. வேற்று நாடுகளிலிருந்து இரவலாக பெறப்பட்ட மாதிரிகளை திணிக்களலாகாது' என்றார்.
அவசர கால சட்டமூலம் நீக்கப்பட்டமை மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பாற்கும் மேம்படுத்துவதற்குமான தேசிய செயத்திட்டத்தையும் அகாசி பாராட்டினார்.
ஜப்பான் அரசு மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலை திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்த யசூசி அகாஷி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், பசில் ராஜபக்ஷ, ரவூப் ஹக்கீம், பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்கஷ ஆகியோருடன் பேச்சு நடத்தினார்.
இதற்கு மேலதிகமாக ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் இவர் பேச்சு நடத்தியமை குறிப்பிடத்தக்கது. Pix By :- Nisal Baduge
7 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
9 hours ago