Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2012 ஜனவரி 22 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
சம்மாந்துறையை சேர்ந்த ஏ.சீ.எம்.புஹாரி மௌலவி உள்ளிட்ட ஆறு பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் சென்னை விமான நிலையத்தில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 1.5 கோடி இந்திய ரூபா பெறுமதியான 6.5 கிலோ கிராம் போதைப்பொருட்களை சென்னை விமான நிலையத்திலிருந்து கோலாம்பூரிற்கு கடத்த முற்பட்ட போதே, சுமார் 70 வயதான புஹாரி மௌலவி உள்ளிட்ட ஆறு பேர் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யபப்ட்டதாக இந்தியாவின் "த ஹிந்து" நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து புஹாரி மௌலவிக்கு சொந்தமான சம்மாந்துறை வீடு அண்மையில் பொலிஸாரினால் சோதனையிடப்பட்டதாக, லிஸ் ஊடக பேச்சாளர் எஸ்.பி.அஜித் ரோஹன தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தனர்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தலைமையகத்தின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அறிவிறுத்தலையமுடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவுடனேயே இத்தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கு இடமான எந்தவித பொருட்களை கைப்பற்ற முடியவில்லை. குறித்த வீடு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புஹாரி மௌலவி இந்தியாவில் கைது செய்யப்பட்டமையையடுத்தே, அவரிற்கு சொந்தமான சம்மாந்துறை வீட்டை சோதனையிட குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தலைமையகத்தினால் உத்தரவு வந்திருக்கலாம் என எதிர்பார்ப்பதாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய உயர் அதிகாரி தெரிவித்தார்.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி தஹாயக்க மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்ற பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.இப்றாஹீம் தலைமையிலான குழுவினரே இத்தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் ஜெட் எயார்வேஸ் நிறுவனத்தின் பஸ் ஒன்றின் சாரதியான பாலகுமார் என்பவர் 1.5 கோடி இந்திய ரூபா பெறுமதியான எபிடரின் எனும் போதைப்பொருளை கடத்த முற்பட்டபோது கைது செய்யப்பட்டதாக "த ஹிந்து" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கோலாலம்பூருக்குச் செல்விருந்த மூன்று பயணிகளிடம் ஒப்படைப்பதற்காக இப்போதைப்பொருளை அவர் கொண்டுசென்றதாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த மஹ்மூத் புஹாரி அப்துல் காதர், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பெண்ணான குலாம் அப்துல் ரஹ்மான் கத்ரியா, ராமநாதபுரம் எஸ்.வி. பட்டிணத்தைச் சேர்ந்த மொஹமட் யூஸுப் மர்சூக் ஆகிய 3 பயணிகள் பாலகுமார் இயக்கிய பஸ்ஸில் ஏறியதாகவும் அந்த பஸ்ஸில் போதைப்பொருள் பொதிகள் வைக்கப்பட்டிருக்கும் இடம் அவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்ததாகவும் "த ஹிந்து" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அப்பொதிகளை ஸ்கேன் சோதனையிடப்பட்ட பைகளுக்குள் போட முயன்ற போது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
இப்போதைப்பொருட்களை விமான நிலையத்திற்கு கொண்டுவந்ததாக கூறப்படும் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஜாகிர் ஹுஸைன் மற்றும் பல்லவரத்தைச் சேர்ந்த மணிகண்டான் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
9 minute ago
24 minute ago
39 minute ago
57 minute ago
Marothoor A.M.R Monday, 23 January 2012 04:57 PM
யாவும் அறிந்தவன் அல்லாஹ்வே......! ! !
Reply : 0 0
G7 Tuesday, 31 January 2012 08:02 PM
யா அல்லாஹ் இவ்வாறான செய்திகளில் இருந்தும் எமக்கு பாதுகாப்பு அளிப்பாயாக.
Reply : 0 0
Bin Mohdeen Thursday, 26 January 2012 04:20 AM
இவரும் “வரலாற்றில் ஓர் ஏடு” சொன்னவர்தான். ஆனால், எண்பதுகளில், காத்தான்குடி புஹாரி மவ்லவிக்கு முன்னர். ஆதாரம் “தாரீகுல் குலபா “ என்று இரவு 8:58 க்கு முடிக்கும் நிகழ்ச்சி இன்னும் காதுகளுக்குள் ஒலிக்கின்றன. எதிர்பாராத இவ்வாறான சோதனைகளிலிருந்து இறைவன் எல்லோரையும் காப்பாற்றுவானாக.
Reply : 0 0
safraz mohamed Wednesday, 25 January 2012 04:46 PM
யாவும் அறிந்தவன் இறைவன் ஒருவனே ,
Reply : 0 0
Fainaz Wednesday, 25 January 2012 05:58 AM
அடப் பாவிகளா, "வரலாற்றில் ஓர் ஏடு" புஹாரி மௌலவி காத்தான்குடியைச் சேர்ந்தவர். சம்மாந்துறை அல்ல. தீர விசாரிக்காமல் கமெண்ட் அடித்துவிட்டு அவதூறுப் பாவத்தில் வீழ்ந்து விடாதீர்கள்.
Reply : 0 0
thuraiyooran Wednesday, 25 January 2012 12:38 AM
மாடு உசும்பாமல் மணி உசும்புமா ? என்னே செய்வது பொறுத்திருந்து பார்போம்
Reply : 0 0
Hussai Tuesday, 24 January 2012 11:48 PM
சமுதாயத்தை பொறுத்த வரையில் இந்த செய்தி பொய்யாக இருக்க வேண்டும். உண்மையாக இருந்தால் நிச்சயமாக சமுதாயம் யாரை நம்புவது யாரை நம்பாமல் இருப்பது என்ற குழப்பத்தில் தத்தளிக்கும்.
உண்மையாக இருந்தால் அல்லாஹ்வே அவரை தண்டிக்கட்டும். எல்லா புகழும் புகழ்ச்சியும் அகிலம் எல்லாம் படைத்தது ஆளும் அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும்.
Reply : 0 0
muhammath Ranoos Tuesday, 24 January 2012 06:28 AM
இந்த செய்தி நிஜம் இல்லாமல் இருக்க வேண்டும் என அல்லாஹ்விடம் துஆ செய்வோம் ..
Reply : 0 0
mohamed haniffa Tuesday, 24 January 2012 02:49 AM
உண்மை எமக்கு தெரியாத நிலையில் தீர்ப்பை அல்லாஹ்விடம் விட்டு விடுவோம்.
Reply : 0 0
Sathis Kumar Monday, 23 January 2012 11:36 PM
கருத்துக்கூற முடியாது
Reply : 0 0
ummpa Monday, 23 January 2012 11:33 PM
Dr.Roshan,
Yes same feeling too. but unfortunately it's not . Just google it 15/11/2011 news paper which is belongs to ur country.
Reply : 0 0
yoosuf Monday, 23 January 2012 11:17 PM
இவர் "வரலாற்றில் ஓர் ஏடு" புஹாரி மௌலவி இல்லை. "
Reply : 0 0
Roshan M Leeds Monday, 23 January 2012 07:02 PM
This may be a an attempted smuggling by the drug dealers. The delaers would place the bags without the knowledge of the passengers and ultimately would say that the passengers were aware of the bags to save their skin. We should wait and see before spilling venomous comments.
Reply : 0 0
fjj Monday, 23 January 2012 05:01 PM
தமிழ் மிர்ரர் பத்திரிகைக்கு ஒரு வேண்டுகோள் ! இங்கு சாட்டப்பட்டுள்ளவர்கள் குற்றவாளிகள இல்லையா என்பது இந்த விசயம் கடைசிவரை பிரசுரித்தாலே புரியும். எனவே இதன் தொடர்ச்சியை கடைசிவரை வெளியிட வேண்டும் !
Reply : 0 0
haneef Monday, 23 January 2012 12:20 AM
யார்?????????? வரலாற்றில் ஓர் ஏடு புஹாரி மௌலவியா?
Reply : 0 0
najath Monday, 23 January 2012 04:51 PM
என்னங்க .நம்பவே முடியல்ல
Reply : 0 0
mahroof-Oddamavadi Monday, 23 January 2012 04:29 PM
அதிர்ச்சியான செய்தி. அவசரப்பட்டு தவறாண விமர்சனங்களை எழுதுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். பொறுமையுடன் இருப்போம்.
Reply : 0 0
sano Monday, 23 January 2012 03:58 PM
Dear Avathani அது என்ன பொறுமை? இதே ஒரு சாதாரண மனிதன் செய்திருந்தால் உங்களது reactions இப்படியா இருந்திருக்கும்? எவன் தப்பு செய்தாலும் தப்பு தப்புதான் இறைவனிடத்தில்.
Reply : 0 0
fazal Monday, 23 January 2012 03:00 PM
நண்பர்களே அவசரப்பட வேண்டாம். உண்மை எமக்கு தெரியாத நிலையில் தீர்ப்பை அல்லாஹ்விடம் விட்டு விடுவோம். அவர் நிரபராதி என்றால் அவர் மீதான அபாண்டத்திற்கு இறைவன் அவருக்கு அவருக்கு நியாயம் அளிப்பன். அவர் குற்றவாளி என்றால் நிச்சயமாக இறைவன் நியாயமானவன். மனிதரின் தவறை தேடுவது எமது வேலை அல்ல. பூரணமாக தெரியாதா ஒன்றை பற்றி பேசித்திரிவதும் முஸ்லிமுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
Reply : 0 0
pasha Monday, 23 January 2012 02:34 PM
இவர் அண்மைக்காலமாக மார்க்க பணியில் இருந்து ஒதுங்கி இருந்தபோது இவர் நோய் வாய் பட்டு ஒதுங்கி உள்ளார் என நினைத்தேன்.
Reply : 0 0
ummpa Monday, 23 January 2012 02:26 PM
இது இவரா? எனக்கு சரியாக சொல்ல முடியவில்லை இருந்தாலும் suntv இதனை ஒளிபிரப்பியது. தமிழ்நாடு பத்திரிகைகள் எல்லாம் கிழித்துவிட்டது மக்களின் கருத்துக்களால்.
Reply : 0 0
Kaisambu A Monday, 23 January 2012 02:19 PM
இந்த மனிசனுக்கு ஏன் தேவல்லாத வேலை இந்த வயசில.. ஊரோட பகுதியோட இருக்காம ... சிசிசிஸ் என்னொரு கனஹாட்டும்ம் கக்கிசமும் ஆண்டவனே .....
Reply : 0 0
Ajifa Monday, 23 January 2012 02:05 PM
அவரின் வயதுக்கும் கட்டவிழ்த்து விடப்பட இந்த செய்திக்கும் இடையில் எவ்வளவு வித்தியாசம் பொறுத்திருந்திருண்டு பார்போம்!
Reply : 0 0
Aslam Monday, 23 January 2012 01:44 PM
யாரைத்தான் நம்புவதோ?
Reply : 0 0
xlntgson Monday, 23 January 2012 12:51 PM
Rarely a Moulavi's name seen in this nefarious activity, though some were accused behind for helping few, if he is framed so, why?
Reply : 0 0
avathaani Monday, 23 January 2012 03:03 AM
நபிகளாரின் பொன் மொழியும் எனது உம்மத்துக்கு பணம் ஒரு சோதனை என்பது பொய்யாகாது, இவ்விடயத்தில்,பொறுமையே மிக அவசியம் ,இறைவன் போதுமானவன்.
Reply : 0 0
mawseen Monday, 23 January 2012 01:15 AM
இச்செய்தி தொடர்பில் சம்மாந்துறையை சேர்ந்த செய்தியாளர்களால் எழுத முடியாமல் போயிவிட்டதா? ??????????? ஏன் அவர்களுக்கு பயமா??????? அல்லது ஊர் பற்றா?????? யாராக இருந்தாலும் இப்படி தவறா வழயில் ஈடுபட்டவர்களை வெளிக்கொண்டு வர வேண்டும். காலம் தாழ்த்தி கொண்டுவந்தாலும் உண்மை தன்மையை வெளிக்கொண்டு வந்த தமிழ்மிரருக்கு நன்றிகள்.
Reply : 0 0
AHAMED JUNAID Monday, 23 January 2012 12:36 AM
அல்லாஹ்வுக்கே வெளிச்சம் பொறுத்திருந்து உண்மை நிலைமைகளை அறிந்தபின் கருத்துக்களை கூறுவோம் . அவசரப்பட்டு கருத்துக்களைக் கூறிவிடாதீர்கள் .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
24 minute ago
39 minute ago
57 minute ago