2025 மே 16, வெள்ளிக்கிழமை

5 இளைஞர்கள் கடத்தல்: கரன்னாகொடவின் பாதுகாப்பு அதிகாரிக்கு தொடர்பு

Thipaan   / 2015 ஜூன் 23 , பி.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெஹிவளை பகுதியில் 2009ஆம் ஆண்டு 5 இளைஞர்களை  கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவின் தனியார் பாதுகாப்பு அதிகாரி தொடர்புபட்டிருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொறுப்பாளர் நீதிமன்றில் சாட்சி அளித்துள்ளார்.

இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில், நேற்று (23) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

கடத்தப்பட்ட இளைஞர்களின் பெற்றோரிடம் குறித்த நபர், கோடி ரூபாய் கப்பம் கோரியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதென அவர் சாட்சியமளித்துள்ளார்.

கடத்தப்பட்ட இளைஞர்கள் கொழும்பு மற்றும் திருகோணமலை கடற்படை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .