2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

சஜித் மீதான வழக்கு ஆதாரம் வழங்க திகதி குறிப்பு

Princiya Dixci   / 2015 ஜூலை 17 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.எஸ்.செல்வநாயகம்

வாழ்வின் எழுச்சி சமூதாய அடிப்படை வங்கிகளின் நிதியை பயன்படுத்தி, வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாஸவினதும் ஐ.தே.க. உறுப்பினர்களினதும் அரசியல் ஆதரவாளர்களுக்கு கடன் வழங்கப்படுவதாக செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு ஜூலை 29ஆம் திகதியில், ஆதாரம் வழங்குமாறு உயர் நீதிமன்றம், நேற்று வியாழக்கிழமை (16) அறிவித்துள்ளது.

நீதியரசர் குழுவில் பிரியந்த ஜயவர்த்தன மற்றும் உபாலி அபேரத்ன ஆகியோர் காணப்பட்டனர்.
இந்த மனுவை அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவியாளர் சங்கமும் அதன் பிரதான உறுப்பினர் இருவரும் தாக்கல் செய்தனர்.

மனுதாரர் சார்பில், ஜனாதிபதி வழக்குரைஞர் மனோகர டி சில்வா ஆஜரானார். சஜித்; பிரேமதாஸ சார்பில் ரெமேஷ் டி சில்வா, சாலிய பீரிஸ் சுகத் கல்டெராகவும் ஆஜராகினர். பிரதமர் சார்பில் ஜி.ஜி. அருள் பிரகாசம் வழிப்படுத்தலில் மூன்று பிரபல வழக்குரைஞர்கள் ஆஜராகினர்.

சமுர்த்தி பயனாளிகளுள் தெரிவுசெய்யப்பட்ட சிறிய பிணையாளர் குழுவுக்கு வெளியே உள்ளவர்களான,  கடன்களுக்கு சிபாரிசு செய்ய அனுமதிக்கும் சுற்றறிக்கை சமுர்த்தி வங்கித் திட்டத்தை அரசியல் சலுகைகள் வழங்க பயன்படுத்த வழிவகுத்துள்ளதென மனுதாரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் நிதி மோசடி புலனாய்வு பிரிவுக்கு முறையிடச் சென்றபோது, அவர்கள் முறைப்பாட்டை ஏற்க மறுத்து, பிரதமரால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட புலனாய்வு பிரிவு அனுப்பிவைக்கும் முறைப்பாடுகளை மட்டுமே தாங்கள் ஏற்பதாக கூறியதாக, மனுதாரர் முறையிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X