2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

காவத்தை இரட்டை படுகொலை வழக்கு: ஜூரிகள் இன்றி விசாரணை

Gavitha   / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

காவத்தை கொட்டகெத்தன நயனா நில்மினி மற்றும் காவிந்தியா சத்துரங்கி ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கை ஜூரிகள் இன்றி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு வழக்கின் பிரதிவாதிகள் கோரிநின்றனர்.

பிரதிவாதிகளின் கோரிக்கையை ஏற்ற, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசலா வீரவர்தன, இந்;த வழக்கை, ஜூரிகள் இன்றி இன்று (நேற்று) செவ்வாய்க்கிழமை முதல் விசாரணைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

ஜூரி சபைக்கான உறுப்பினர்கள் பிரசன்னமாய் இருந்த வேளையிலேயே பிரதிவாதிகள் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தனர்.

கஹாவத்தை, கொட்டகெத்தன இரட்டை கொலைவழக்கு தொடர்பில் மூன்றுவருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொக்குகமகேஹேவாகே தர்ஷன என்றழைக்கப்படும் ராஜூ மற்றும் அவருடைய மனைவியான ரஷிகா சாந்தனி உதயகுமாரி என்றழைக்கப்படும் அசோகா ஆகிய இருவருக்கும் பிணைவழங்குவதை கொழும்பு மேல் நீதிமன்றம், ஜூலை மாதம் 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிராகரித்தது.

அவ்விருவருக்கும் எதிரான வழக்கை ஜூரி சபையின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்வதற்கும் நீதிமன்றம் அன்று தீர்மானித்தது.

கொட்டகெத்தன நயனா நில்மினி( வயது 52) காவிந்தியா சந்துரங்கி (வயது 17) ஆகியோர் கொலை தொடர்பிலேயே இவ்விருவரும் கடந்த 3 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்விருவருக்கும் 8 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட 5 குழந்தைகள் இருப்பதாகவும் அவர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு அவ்விருவருக்கும் பிணை வழங்குமாறு அவ்விருவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் அன்று கோரிநின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கஹாவத்தை, கொட்டகெத்தன பிரதேசத்தில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த வழக்கில் பாரிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த பிரதிவாதிகள் மூவரும் குற்றமற்றவர்களாக விடுதலை செய்யப்பட்டு அளிக்கப்பட்ட தீர்ப்பை இரத்துசெய்யுமாறு கோரி சட்டமா அதிபர், ஜூன் 15ஆம் திகதி திங்கட்கிழமை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.

பிரதிவாதிகளான சமிந்த டி சில்வா, சிசிர பிரியந்த லொக்குகம ஹோவகே மிட்டிகம ஆகிய பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்து, சட்டத்துக்கு அமைவாக தண்டனை வழங்குமாறும் சட்டமா அதிபர் அந்த மனுவில் கோரியிருந்தார்.

கஹாவத்தை, கொட்டகெத்தன பிரதேசத்தில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மூவரும் நிரபராதிகள் என மே மாதம் 28ஆம் திகதி  வியாழக்கிழமை(28) தீர்ப்பளித்த கொழும்பு மேல் நீதிமன்றம் அந்த மூவரையும் விடுதலை செய்திருந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பை வாசித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா டி தென்னகோன், அந்த மூவர் மீதும் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்பதனால் அந்த மூவரையும் நிரபராதிகளாக விடுதலை செய்வதாக அன்று அறிவித்தார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய எல்.ஜீ.பிரேமவதி மற்றும் அவரது மகள் எச்.ஜீ.புஸ்பகுமாரி (வயது 23), ஆகிய இருவரும் கடந்த 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டு அவர்களுடைய சடலங்கள் எரியூட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X