Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.நா மனித உரிமை பேரவையின் அறிக்கையின் பிரகாரம் படைவீரர்களுக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுமாயின் தனிநபர் சட்டமூலமாக பொறுப்புடன் விடுதலை செய்யும் சட்டமூலத்தை கொண்டுவருவேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கோட்பாட்டை இலங்கையும் அமோதிக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
பொறுப்புடன் விடுதலை செய்யும் சட்டமூலம் இதற்கு முன்னர் இலங்கையில் மூன்று சந்தரப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
1915 ஆம் ஆண்டு சிங்கள-முஸ்லிம் மோதல் காரணமான பொலிஸ் மற்றும் இராணுவத்தை விடுதலை செய்வதற்காக 1915 ஆம் ஆண்டு அரச சபையில் முன்வைக்கப்பட்டது.
1977 ஆம் ஆண்டு கிளர்ச்சிக்காரர்களை எதிர்த்து, அரச அதிகாரிகளை விடுவிப்பதற்காக 1982 ஆம் 20ஆம் இலக்க பொறுப்புடன் விடுதலை செய்யும் சட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்தில் அனுமதித்தது.
1987 ஜே.வி.பி கிளர்ச்சியார்களை ஒடுக்குவதற்காகவும் இராணுவத்தை ஒடுக்குவதற்காகவும் 1988 ஆம் 60ஆம் இலக்க பொறுப்புடன் விடுவித்தல் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் உறுப்பினர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
23 minute ago
25 minute ago