Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிட்ட மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், அந்த அறிக்கையில், நீதியானதும் வெற்றிகரமானதுமான விசாரணையை மேற்கொள்வதற்கு, இலங்கை எதிர்நோக்கும் சவால்களையும் பட்டியற்படுத்தியுள்ளார்.
1. பாதிக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்கும் பாதுகாப்பளிப்பதற்கான எந்தவொரு நம்பகத்தன்மையுமுள்ள கட்டமைப்பும் இலங்கையில் இல்லை. பெப்ரவரி 2015 இல், நீண்டகாலமாக வேண்டிநிற்கப்பட்ட அச்சட்டமூலத்தை நிறைவேற்றியது, ஆனால், அது செயற்படுநிலையை அடைவதற்கான எந்தவொரு உறுதியான செயற்பாடும் மேற்கொள்ளப்படவில்லை. புதிதாக, சாட்சிகள் பாதுகாப்பு அதிகாரசபைக்கு நியமிக்கப்படவுள்ளவர்;களின் நற்பெயரில் முக்கியமானதாகும்.
2. இரண்டாவதாக, இந்தளவான சர்வதேசக் குற்றங்களை எதிர்கொள்வதற்கு, இலங்கையில் உள்ளூர் சட்ட வேலைப்பாட்டில் போதுமற்ற தன்மை. ஜெனிவா சாசனத்தின் மேலதிக நெறிமுறைகள், காணாமல் போகச் செய்யப்படுதலிலிருந்து அனைத்துப் பிரஜைகளையும் பாதுகாக்கும் சர்வதேச சாசனம் உட்பட பல்வேறு சர்வதேச சட்டங்களில் இலங்கை கையெழுத்திட்டிருக்கிவில்லை. அத்தோடு, காணாமல் போகச் செய்யப்படுதல், போர்க் குற்றங்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள், இனவழிப்பு ஆகியவற்றை குற்றமாக்கும் சட்டங்களைக் கொண்டிருக்கவில்லை. முன்னைய காலங்களில், முரண்பாட்டோடு சம்பந்தப்பட்ட குற்றங்களை, சாதாரண சட்டத்தின் கீழேயே இலங்கை விசாரித்தது. அக்குற்றங்களின் அளவைக் கருத்திலெடுக்கத் தவறியுள்ளது.
இலங்கை போன்ற நாடுகளில் காணப்படும் சட்ட ஏற்பாடுகள், சாதாரண குற்றங்களுக்குப் பொருத்தமானவையாக இருக்கலாம், ஆனால், கட்டமைப்பு ரீதியான குற்றங்களுக்குப் பொருத்தமான தீர்வை வழங்க அவை தவறலாம் என்பதோடு, பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கவும் தவறலாம்.
நீதித்துறை பொறுப்புக்கூறலென்பது, பாதிக்கப்பட்டோரின் துயரம் உணரப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக, உண்மையைக் கண்டறிதல், இழப்பீடு உட்பட்டதாக, விரிந்த நீதி நடவடிக்கைகளைக் கொண்டிருக்க வேண்டும். இவ்விடயத்தில், இலங்கையிலுள்ள எந்தவொரு பொறுப்புக்கூறல் நடைமுறையும் முரண்பாட்டினதும் கலகத்தினதும் குறைந்தது 1970ஆம் ஆண்டுவரையாவது சென்று, முழுமையான காலத்தைக் கணக்கிலெடுத்தலென்பது முக்கியமானது. அரசியல் நலனைக் கருத்திற்கொண்டு, பொறுப்புக்கூறல் நடைமுறைகள் எடுத்துச் செல்லப்படுதலைத் தடுக்கவும் இது உதவும்.
3.இலங்கையின் பாதுகாப்புத் துறையும் நீதிக் கட்டமைப்பும், பல தசாப்தகால அவசரநிலை, முரண்பாடு, சட்ட விலக்கு ஆகியன காரணமாக திரிவடைந்தும் மாசுபட்டும் காணப்படும் அளவு காணப்படுகிறது. பல வருடங்களாக, நீதித்துறையில் நிறைவேற்று அதிகாரத்தினது அரசியல் குறுக்கீடென்பது வழக்கமாகக் காணப்பட்டது. சட்டமா அதிபர் திணைக்களம், மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகிய முக்கிய நிறுவனங்களின் சுயாதீனமும் நற்பெயரும் இன்னமும் குறைவடைந்தேக காணப்படுகிறது.
பாதுகாப்புப் படைகள், பொலிஸ், புலனாய்வுச் சேவைகள் ஆகியன கிட்டத்தட்ட முழுமையான சட்ட விலக்கை அனுபவித்து வந்ததோடு, ஆயுத முரண்பாட்டின் பின்னர் கணிசமானளவு ஆட்குறைப்பிலோ அல்லது சீரமைப்பிலோ ஈடுபட்டிருக்கவில்லை. பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் பொதுமக்கள் பாதுகாப்பு அவசரகாலச் சட்டமும் இன்னமும் அமுலிலிருக்கின்றன. வடக்கு, கிழக்கிலுள்ள போரால் பாதிக்கப்பட்ட இடங்களில் இராணுவம் இன்னமும் ஒடுக்கப்படும் நிலையைக் கொண்டுள்ளது. இன்னமும், அதிகளவிலான தனியாரின் காணிகளைக் கொண்டுள்ளதுடன், வர்த்தகப் பொருளாதார நடவடிக்கைகளுக்கு விரிவுபடுத்துவதோடு, உள்ளூர் மக்களுக்கும் சிவில் சமூகத்தின் மீது கண்காணிப்பு, தொல்லை வழங்கும் கலாசாரத்தைக் கொண்டிருக்கிறது.
நிறுவன ரீதியானதும் சட்ட ரீதியுமானதுமான பரந்த சீரமைப்பின்றி, முரண்பாடு மீள ஏற்படாதென்பதற்கான உறுதிப்பாடு இல்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
13 minute ago
22 minute ago