Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 31 , பி.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சேறு பூசப்பட்டுள்ளது. அதனை அவர் கழுவிக்கொள்ள வேண்டுமாயின், அந்த மோசடியில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை வழங்க, தனிப்பட்ட ரீதியில், ஜனாதிபதி முன்னிலையாக வேண்டுமென, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கம்மன்பில, அதில் முதலாவதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிடின், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவரப்போவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், அர்ஜுன மகேந்திரன், பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் தலைவர்கள் அனைவரதும் வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் குறித்த நிறுவனத்தின் கணக்குகளை முடக்கிவிட்டு, அந்நிறுவனம் வசமுள்ள பணத்தை, மத்திய வங்கி பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்றும், கம்மன்பில பரிந்துரை செய்துள்ளார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago