2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தங்கைக்காக எழுதிய மூத்த அக்கா கைது

Gavitha   / 2016 டிசெம்பர் 18 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப்பரீட்சையில் தோற்றவிருந்த தன்னுடைய இளைய தங்கைக்காக, பரீட்சை எழுதியதாகக் கூறப்படும் அவளுடைய மூத்த அக்காவை கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  ஹம்பாந்தோட்டை பகுதியில் உள்ள பரீட்சை மத்திய நிலையத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  

தன்னுடைய தங்கைக்காக அவளுடைய மூத்த அக்கா ஒருவர், பரீட்சைக்குத் தோற்றியிருப்பதாக, பரீட்சை மத்திய நிலைய மேற்பார்வையாளரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.  

இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பில், பரீட்சை மத்திய நிலைய மேற்பார்வையாளர். இதுதொடர்பில், பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார். இதனையடுத்தே, கடந்த 16ஆம் திகதியன்று அந்தப் பெண்ணை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.  

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .