Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஜனவரி 29 , பி.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் மருமகனும் பேர்பெச்சுவல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவருமான அர்ஜுன் அலோஷியஸின் உடலிலிருந்து, அனைத்து உரோமங்களையும் நீக்கி, அதை ஒன்றிணைந்த எதிரணியிடம் காட்டவுள்ளதாக, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியில் சம்பந்தப்பட்டவர் என எதிரணியினரால் சந்தேகிக்கப்படும் அர்ஜுன் அலோஷியஸை, அரசாங்கம் பாதுகாத்து வருவதாக, எதிரணியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதன் ஓர் அங்கமாக, அண்மையில் கருத்துத் தெரிவித்த ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, அரசாங்கத்தால் இயலுமென்றால், அர்ஜுன் அலோஷியஸின் உடலிலிருந்து ஓர் உரோமத்தையாவது பிடுங்கிக் காட்டட்டும் எனச் சவால் விடுத்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, அநுராதபுரத்தில் உரையாற்றிய பிரதியமைச்சர் ரஞ்சன், அர்ஜுன் அலோஷியஸின் உடலிலிருந்து ஓர் உரோமத்தை மாத்திரமன்றி, அவரது உடலில் காணப்படும் அத்தனை உரோமத்தையும் நீக்கவுள்ளதாகவும் அதன் பின்னர் அர்ஜுனின் உடலை, நாடாளுமன்ற உறுப்பினருக்குக் காட்டவுள்ளதாகவும் தெரிவித்தார்.
12 minute ago
18 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
18 minute ago
24 minute ago