2025 ஜூலை 05, சனிக்கிழமை

2018 நிறைவில் 1,229 மரண தண்டனைக் கைதிகள்

Kamal   / 2019 ஜனவரி 10 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடந்த வருடம் டிசெம்பர் 31ஆம் திகதி வரையில், மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு, மேன்முயீடு செய்துள்ள கைதிகள்  1,299 பேர், சிறைச்சாலைகளுக்குள் உள்ளனரென, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அவர்களில் 1,215 ஆண்களும் 84 பெண்களும் உள்ளடங்குவதாகவும் இவர்களில் 789 ஆண் கைதிகளும், 34 பெண் கைதிகளும் மேன்முறையீடு செய்துள்ளனர் என்றும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண தண்டனைக்கு உட்படுத்தியே ஆக வேண்டும் என்ற நிலையில் 476 கைதிகள் உள்ளனர் எனவும், அவர்களில் 426 ஆண்களும் 50 பெண்களும் அடங்குகின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .