Editorial / 2025 நவம்பர் 19 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்துக்கு எதிராக நாங்கள் 21 ஆம் திகதி நுகேகொடையில் மாபெரும் பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம். இந்நிலையில், எமக்கு போட்டியாக ஜனாதிபதி 20 ஆம் திகதி தங்காலையில் மக்கள் கூட்டத்தை நடத்துகிறார். ஜனாதிபதியின் கூட்டத்துக்கு ஆட்களை திரட்டும் பொறுப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட எம்.பி.யான டி.வி.சானக குற்றஞ்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) அன்று இடம் பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சு மற்றும் தொழில் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கூட்டத்துக்கு பொதுமக்கள் எவரும் தன்னிச்சையாக செல்வதில்லை. ஆகவே ஜனாதிபதியின் கூட்டத்துக்கு ஆட்களை சேர்க்கும் பொறுப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் இந்த அரசியல் கூட்டத்துக்கு ஆட்களை சேர்க்கும் அறிவிப்பை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் விடுத்துள்ளார்.இதற்கமைய தங்காலை பொலிஸ் பிரிவில் இருந்து 397 பேர், பெலியத்த பொலிஸ் பிரிவில் இருந்து 420 பேர், வலஸ்முல்ல பொலிஸ் பிரிவில் இருந்து 360 பேர், வீரகெட்டிய பொலிஸ் பிரிவில் இருந்து 414 பேர், மித்தெனிய பொலிஸ் பிரிவில் இருந்து 246 பேர், அங்குனுகொல்ல பொலிஸ் பிரிவில் இருந்து 264 பேர், கிரிந்த பொலிஸ் பிரிவில் இருந்து 36 பேர், துறைமுக பொலிஸ் பிரிவில் இருந்து 36 பேர் , திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவில் இருந்து 198 பேர் என்ற அடிப்படையில் ஆட்களை அழைத்துவருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் பொய் என்று அரசாங்கத்தால் குறிப்பிட முடியுமா?ஜே .வி.பி.யின் செயற்பாடுகளுக்கு பொலிஸார் முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுகிறார்கள் என்றார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago